டெல்லி ரமேஷ் நகரில் சிற்றுண்டி பாக்கெட்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் இரண்டாயிரம் கோடி மதிப்பிலான 200 கிலோ கொகைன் போதைப்பொருளை காவல்துறையின் சிறப்புப் பிரிவினர் பறிமுதல் செய்தனர். ஜிபிஎஸ் மூலம் போதைப் பொருள் சப்ளை செய்பவரை கண்டறிந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் லண்டனுக்கு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.