ஸ்பெஸ்ஜெட் விமான நிறுவனம் தமக்கு ஆயிரத்து 323 கோடி ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என சன் நெட்வொர்க் அதிபர் கலாநிதி மாறன் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. ஸ்பெஸ்ஜெட்டின் முன்னாள் உரிமையாளரான கலாநிதி மாறன், ஆயிரத்து 323 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு ஸ்பைஸ்ஜெட் மீது தொடர்ந்த வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்த து. அதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து நீண்ட நாட்களாக கலாநிதி மாறனுக்கும் ஸ்பெஸ்ஜெட்டின் தற்போதைய உரிமையாளருக்கும் இடையேயான நிதிமன்ற போர் முடிவுக்கு வந்துள்ளது. 2015 ல் கலாநிதி மாறன் ஸ்பைஸ்ஜெட்டில் தமக்கு இருந்த 58 புள்ளி 46 சதவிகித பங்கை அஜய் சிங் என்பவருக்கு விற்றதில் இருந்து இரு தரப்புக்கும் இடையே பங்கு விற்பனை தொடர்பான தாவா இருந்து வருகிறது.