ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிய கருத்துக்கு இந்திய வெளியுறவுத் துறை பதிலளித்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா விரைவிலேயே நிறுத்தும் என பிரதமர் மோடி தன்னிடம் உறுதி அளித்திருப்பதாக டிரம்ப் கூறினார்.! இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் சுமார் 80 சதவீதத்தை ரஷ்யா தான் பூர்த்தி செய்து வருகிறது என்ற நிலையில், டிரம்ப்பின் கருத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை பதிலளித்துள்ளது. இந்தியாவிலுள்ள நுகர்வோரின் நலன்களை பாதுகாப்பது தான் முன்னுரிமை எனவும், நிலையான எரிசக்தி விலை மற்றும் பாதுகாப்பான விநியோகத்தை உறுதி செய்வது மட்டுமே இந்தியாவின் இரட்டை எரிசக்தி கொள்கைகள் எனவும் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. மேலும், கடந்த சில ஆண்டுகளாகவே அமெரிக்காவுடன் எரிசக்தி கொள்முதல் சந்தையை விரிவுபடுத்த இந்தியா முயற்சித்து வருகிறது எனவும், தற்போதையை டிரம்ப் தலைமையிலான நிர்வாகமும் இதில் ஆர்வமாக இருப்பதால் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளது.