மத்திய பிரதேசத்தில் தீபாவளியின் போது கார்பைட் கன் என்ற விளையாட்டு துப்பாக்கியை பயன்படுத்தியதில் 14 குழந்தைகள் கண் பார்வையை நிரந்தரமாக இழந்த சோக சம்பவம் நடந்துள்ளது. மூன்று நாட்களில் மட்டும் இந்த துப்பாக்கியை வைத்து விளையாடியவர்களில் 122 க்கும் அதிகமான குழந்தைகள் பார்வை பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். கடந்த 18 ஆம் தேதி மாநில அரசால் தடை செய்யப்பட்ட இந்த கார்பைடு கன்கள் மத்திய பிரதேசத்தின் விதிஷா மாவட்டத்தில் எந்த தடையும் இன்றி விற்கப்பட்டதே குழந்தைகளின் பார்வை பறிபோக காரணம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த துப்பாக்கியை விற்றதாக ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.