காட்டு யானைகளை இடையூறு செய்த வீடியோ வைரலாகி வருகிறது. கேரள மாநிலம், வயநாடு செல்லக்கூடிய சாலைகள் பெரும்பாலும் அடர்ந்த வனப்பகுதி என்பதால் யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில், வயநாடு திருநெல்லி சாலையில், யானைக் கூட்டம் நின்றிருந்த போது, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், வாகனங்களை நிறுத்திக் கொண்டனர். ஆனால், அத்துமீறிய ஒரு கார் வேகமாக யானையின் அருகில் சென்று நின்றது. இதனால் கோபமடைந்த யானை, துதிக்கையால் காரை முட்டியது. பின்பு அந்த பகுதியில் இருந்து கார் வேகமாக சென்றது. இந்த வீடியோ காட்சி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், திருநெல்லி வனத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து யானைகளை அச்சுறுத்தும் விதமாக இடையூறு செய்த நபர்கள் யார்? என கார் பதிவு எண்ணை கொண்டு விசாரணையை தொடங்கியுள்ளனர்.