அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில், இரவு முழுவதும் மனுவை படித்து விட்டு விசாரணைக்கு வந்தால் ஒத்தி வைக்குமாறு கோருகிறீர்கள் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் தனக்கெதிராக வழக்கு பதிவதற்கு வழங்கப்பட்ட தீர்ப்பில், 45 மற்றும் 46 வது பத்திகளை நீக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு, நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர்கள் எவரும் ஆஜராகாத நிலையில், மூத்த வழக்கறிஞர் வேறு ஒரு வழக்கில் ஆஜராகி உள்ளதால், இந்த வழக்கில் ஆஜராக முடியவில்லை என்றும், எனவே வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் எனவும் கோரப்பட்டதால், நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.