பீகாரில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக வெளியாகி உள்ள கருத்துக் கணிப்புகளை ஆர்ஜேடி தலைவரும் இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் நிராகரித்துள்ளார். கருத்துக் கணிப்பில் பெரும்பாலானவை என்டிஏ மீண்டும் ஆட்சியை பிடிக்கும் எனவும் இந்தியா கூட்டணி தோல்வியை தழுவும் எனவும் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி, மக்கள் முழுமையாக வாக்களித்து முடிக்கும் முன்னரே கருத்துக் கணிப்புகள் வெளியாகி விட்டதாக கண்டனம் தெரிவித்தார். தாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்ற அவர், இதை தவறான நம்பிக்கை அல்லது புரிதல் இன்றி தெரிவிக்கவில்லை எனவும் கூறினார். மக்களிடம் உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தவே இது போன்ற கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்படுவதாகவும் அவர் கூறினார்.