இந்தியாவில் ஒரு நாள் தீபாவளி ஆனால் காசாவில் தினந்தோறும் தீபாவளி என எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரபல பாலிவுட் இயக்குநர் ராம் கோபால் வர்மாவுக்கு நெட்டிசன்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தீபாவளியின் போது பட்டாசுகள் வெடிப்பதையும், அதே நேரம் காசாவில் அப்பாவி மக்கள் மீது கொடிய இஸ்ரேல் ராணுவம் குண்டுகளை போடுவதையும் ஒப்பிட்டு வர்மா இப்படி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இணையவாசிகள், புனிதமான தீபாவளி திருநாளையும், காசாவில் குண்டு வெடிப்பதையும் ஒப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்துள்ளனர்.தீப விளக்குகளையும்,அழிவை ஏற்படுத்தும் குண்டு வீச்சையும் ஒன்றாக குழப்பிக் கொள்ளவதாக வேறு சிலர் விமர்சித்துள்ளனர்.