அதானியிடம் இருந்து மின் வினியோக ஒப்பந்தத்திற்காக ஆயிரத்து 750 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக வெளியான தகவலை ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள YSR காங்கிரஸ், அதானிக்கும் ஆந்திர அரசுக்கும் நேரடி ஒப்பந்தம் செய்யப்படவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளது.