ஆபரேஷன் சிந்தூரின் போது இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் கூறியுள்ள நிலையில், நாடாளூமன்றத்தின் சிறப்பு அமர்வை கூட்ட வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை வலுத்துள்ளது. ஆனால் ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அதை தொடர்ந்து எழுந்துள்ள விமர்சனங்கள் உள்ளிட்டவை பற்றி விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு அமர்வை கூட்ட வேண்டாம் என்ற முடிவுக்கு மத்திய பாஜக கூட்டணி அரசு வந்து விட்டதாக தெரிகிறது. ஜூலை மாதம் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் துவங்க உள்ள நிலையில் சிறப்பு அமர்வை இப்போது கூட்ட தேவையில்லை என அரசு முடிவு செய்து விட்டதாக கூறப்படுகிறது. சிறப்பு அமர்வை கூட்ட வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகளிடம் கருத்தொற்றுமை இல்லை எனவும் அரசு கருதுவதாக சொல்லப்படுகிறது.