புரட்டாசி மாதப்பிறப்பை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கூட்டம் அதிகரித்ததால் இலவச தரிசனத்தில் 24 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்தில் உள்ள வைகுண்ட க்யூ காம்ப்ளக்ஸின் 31 அறைகளும் நிரம்பியதால், வெளியே உள்ள கிருஷ்ண தேஜா ஓய்வு அறை வரை சுமார் 2 கிலோ மீட்டருக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.