டெல்லியில் காற்றின் தரம் 14 ஆவது நாளாக மிகவும் மோசமான நிலையிலேயே தொடர்வதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. ஆனந்த் விஹாரில் காற்றின் தரக்குறியீடு 390 ஆகவும், அசோக் விஹாரில் 388 ஆகவும் பதிவானது. டெல்லி தேசிய தலைநகர் பகுதிகள், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது. அதிகரிக்கும் வாகன புகை மற்றும் அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் பயிர் கழிவுகளால் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.