அயோத்தி ராமர் கோவிலில் தீபாவளி தீபோற்சவ விழா நடைபெற உள்ளதையடுத்து பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இதற்காக கோவில் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டுள்ள நிலையில், நகரம் முழுவதும் 28 லட்சம் தீபங்களால் ஒளிரச் செய்யப்பட உள்ளது. இதனை காண நாட்டின் பல பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். தீபோற்சவ விழாவின் போது இராமரின் வாழ்க்கை, சீதையின் பாத்திரம், ஹனுமான் சேவை போன்ற முக்கிய அத்தியாயங்கள் ஒளி, ஒலி, கலை வடிவங்களாக வெளிப்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.