மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களின் வாக்காளர் பட்டியல் விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக வெளியான தகவலுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வரவேற்பு தெரிவித்துள்ளார். கடந்தாண்டு நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜக குளறுபடி செய்து வெற்றி பெற்றதாக 5 படி நிலைகளை பட்டியலிட்டு ராகுல் காந்தி புகார் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் பூதாகரமான நிலையில் ராகுலின் புகாருக்கு மறுப்பு தெரிவித்த தேர்தல் ஆணையம், 2009ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களின் வாக்காளர் பட்டியல் விவரங்களை வெளியிட முடிவு செய்துள்ளது.