குஜராத்தின் வதோதராவில் கம்பீரா பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மாயமான இருவரை தேடும் பணியும், ஆற்றுக்குள் விழுந்த வாகனங்களை மீட்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே வதோதரா மாவட்ட ஆட்சியர் அனில் தமேலியா உள்ளிட்ட அதிகாரிகள், தொடர்ந்து மூன்றாவது நாளாக நடைபெற்று வரும் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை நேரில் ஆய்வு செய்தனர்.