பாஜக, அதானி குழுமம் மற்றும் பங்குசந்தை கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கு இடையே அபாயகரமான உறவு இருப்பதாக, காங்கிரஸ் தரப்பில் புதிய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. பங்குசந்தைகளை கட்டுப்படுத்தும் செபி அமைப்பின் தலைவராக இருக்கும் மாதபி பூரி புச், தமக்கு சொந்தமான ஒரு கட்டடத்தை, செபியின் சந்தேக வளையத்தில் இருக்கும் இந்தியா புல்ஸ் நிறுவனத்திற்கு வாடகைக்கு கொடுத்துள்ளதாகவும் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. செபி அமைப்பின் முழுநேர உறுப்பினராக ஆன பின்னரும் மாதபி புச், Predible Health Private Limited என்ற நிறுவனத்தின் பங்குகளை வைத்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.