டாபர் சியவன் பிராஷுக்கு ((dabur chyawanprash)) எதிராக தவறான விளம்பரங்களை வெளியிட பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்தது. டாபர் சியவன் பிராஷ் டாபர் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் பிரபலமான ஆயுர்வேத சுகாதாரப் பொருளாகும். இந்நிலையில் பதஞ்சலி நிறுவனம், தங்களது தயாரிப்புகளை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வெளியிட்டு, தங்கள் நிறுவன நற்பெயருக்கு தீங்கு விளைவிப்பதாகவும், நுகர்வோரை தவறாக வழிநடத்துவதாகவும் கூறி டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.