பதுங்கு குழிகளுக்குள் ஊடுருவிச் சென்று தாக்கி அழிக்கக்கூடிய அக்னி-5 பங்கர் பஸ்டர் ஏவுகணைகளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ((டி. ஆர்.டி.ஓ.,)) தயாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் ஈரானின் 3 அணுசக்தி நிலையங்களில் அமெரிக்கா இதுவரை பயன்படுத்தாத ஜி.பி.யூ-57 குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த பங்கர் பஸ்டர் குண்டுகள் மீது அனைத்து உலக நாடுகளின் கவனமும் சென்றது. இதனால் நிலத்தடியில் 80 முதல் 100 மீட்டர் ஆழம் வரை ஊடுருவிச் செல்லும் வகையில் அக்னி-5 பங்கர் பஸ்டர் ஏவுகணைகளை இந்தியா தயாரித்து வருகிறது. 7 ஆயிரத்து 500 கிலோ கிராம் எடையுள்ள இந்த ஏவுகணையை போர்க்கப்பலில் கொண்டு சென்றும் ஏவ முடியும் என்றும் சொல்லப்படுகிறது.