நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 257 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 12-ம் தேதி முதல் நேற்று வரை புதிதாக 164 பேருக்கு நோய்தொற்று கண்டறியப்பட்டதாக தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு லேசான அறிகுறிகளே உள்ளதால், கொரோனா பரவல் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் வைரஸ் தொற்று கட்டுக்குள் உள்ளதாகவும், தற்போதைய சூழலை அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.