காபூலில் உள்ள தனது தூதரக அலுவலகத்தை முழு அந்தஸ்து உள்ள தூதரகமாக உயர்த்தி இந்தியா அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சமீபத்தில் இந்தியாவுக்கு வந்த ஆப்கன் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தகியுடன் நடந்த பேச்சுவார்த்தையின் பலனாக ஆப்கனில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்திற்கு முழு தூதரக அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளதாக டெல்லியில் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் காபூலில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும் என ஆப்கனின் தாலிபன் அரசு உறுதி அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லையில் வாலாட்டும் பாகிஸ்தானுக்கு மறைமுக எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஆப்கனில் முழு அந்தஸ்து இந்திய தூதரகம் திறக்கப்படுவதாக கூறப்படுகிறது