தெலங்கானாவில் காங்கிரஸ் பிரமுகர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேடக் மாவட்டத்தை சேர்ந்த அனில், காங்கிரசில் பட்டியலின பிரிவு மாவட்ட செயலாளராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் காரில் சென்றுக் கொண்டிருந்த அவரை இரண்டு கார்களில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், திடீரென இடைமறித்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.