ஹரியானாவை காங்கிரஸ் ஆட்சி செய்தபோது இயற்கை பேரிடர்களால் சேதம் அடைந்த பயிர்களுக்கு வெறும் 2 ரூபாய் காசோலையை மட்டுமே வழங்கப்பட்டதாக பிரதமர் மோடி விமர்சித்தார். மேலும் ஹரியானாவில் பாஜகதான் மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தெரிவித்த பிரதமர் மோடி, காங்கிரஸ்காரர்கள் தங்கள் குடும்பத்திற்காக மட்டுமே வாழ்வதாகவும், அதுதான் அவர்களின் குணம் எனவும் விமர்சித்தார்.