வயநாட்டு மக்களின் பிரச்னைகள் குறித்து மக்களவையில் ராகுல் காந்தி பேசிய போதிலும், மத்திய அரசு அதனை கண்டுகொள்ளவில்லை என பிரியங்கா காந்தி குற்றம் சாட்டினார். வயநாட்டில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய அவர், மக்களை நிலங்களை பிடுங்கி தொழிலதிபர்களிடம் கொடுக்கும் மோடி, மக்களின் நலனை அக்கறை கொள்வதில்லை என குற்றம் சாட்டினார்.