உத்தரபிரதேசத்தில் அரசுப்பணிகளுக்கான தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த மாநில அரசு முடிவெடுத்துள்ளது. அரசுப்பணிகளுக்கான தேர்வை பல ஷிப்ட்களாக நடத்த எதிர்ப்பு தெரிவித்த தேர்வர்களின் போராட்டம் தீவிரமடைந்தது. இது தொடர்பாக மாநில அரசு தேர்வர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. அதில், ஷிப்ட் முறை தேர்வை ரத்து செய்ய அரசு ஒப்புக்கொண்டது.