அனைத்து மாவட்டங்களிலும் அரசு முதியோர் இல்லங்கள் கட்டாயமாக அமைப்பது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆறு மாத காலத்திற்குள் அனைத்து மாவட்டங்களிலும் கட்டாய அரசு முதியோர் இல்லங்கள் உருவாக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.