ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் தரம் குறித்து தொடர்ந்து புகார்கள் எழுந்து வரும் நிலையில், அதுகுறித்து மத்திய அரசு சார்பில் விசாரணை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கும் ஓலா நிறுவனத்தின் ஸ்கூட்டர்களில் பேட்டரி தீப்பிடிப்பது உள்ளிட்ட குறைபாடுகள் தொடர்பாகவும், அதன் சேவை மையங்களின் தரம் குறித்தும் புகார்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. மத்திய நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் பரிந்துரையின் படி, ஓலா நிறுவன தயாரிப்புகள் தொடர்பாக இந்திய தரநிலைகள் பணியகம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.