டெல்லியில் 5 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்புள்ள 560 கிலோ கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரகசிய தகவலின் பேரில் மகிபல்பூர் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற வாகனத்தை சோதனையிட்ட போது கொக்கைன் இருப்பது தெரிய வந்ததையடுத்து 4 பேரை போலீசார் கைது செய்தனர்.