டெல்லி நிஜாமுதீன் ரெயில் நிலையத்தில் IRCTC ஊழியர்களும் ரயில்வே அதிகாரிகளும் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.IRCTC ஊழியர்கள் சிலர், ரயில்வே அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில், திடீரென வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இதனைக் கண்ட ரயில் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.