நீதிமன்றத்தில் குறுக்கு வழி தந்திரங்களை முயற்சிக்க வேண்டாம் என வழக்கறிஞரை தலைமை நீதிபதி கடிந்துக்கொண்டதால் உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு நிலவியது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது தலைமை நீதிபதியால் விதிக்கப்பட்ட உத்தரவின் விவரங்களை நீதிமன்ற பதிவாளரிடம் இருந்து குறுக்கு வழியில் தெரிந்துக்கொண்டதாக வழக்கறிஞர் கூறியதை கேட்டு டென்ஷனான தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நாளை என் வீட்டுக்கு வந்து நான் என்ன செய்கிறேன் என எனது தனிப்பட்ட செயலாளரிடம் கேட்பீர்களா என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து வழக்கறிஞர்களின் புத்தி மழுங்கிவிட்டதாகவும் கடிந்துக்கொண்டார்.