மகாராஷ்டிர மாநிலம் சந்திரபூர் மாநகராட்சிக்கு சொந்தமான குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து குளோரின் வாயுக்கசிவு ஏற்பட்டதால், சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள் பீதியடைந்தனர். அருகிலுள்ள பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கண் எரிச்சல், வாந்தி, மயக்கம், மூச்சுத் திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டதால், நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். மேலும் பலர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.