ஆபரேஷன் சிந்தூர் சண்டையின் போது, பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்திய ராணுவ தளவாடங்களில் 81 சதவிகிதம் சீனாவுடையவை என ராணுவ துணை தலைமை தளபதி ராகுல் ஆர் சிங் தெரிவித்துள்ளார். நவீன கால ராணுவ தொழில்நுட்பங்கள் என்ற நிகழ்ச்சியில் பேசியவர், ஆபரேஷன் சிந்தூரின் போது சீனா, பாகிஸ்தானை ஒரு ஆய்வகமாக பயன்படுத்தி தனது ஆயுதங்களை சோதித்து பார்த்ததாக கூறினார்.