இந்தியாவின் மின்சார வாகனங்கள் மற்றும் பேட்டரிக்கு வழங்கப்படும் மானியங்களால், தங்கள் நாட்டின் பொருளாதார நலன் பாதிப்பதாக, உலக வர்த்தக அமைப்பில் சீனா புகார் தெரிவித்துள்ளது. மேலும், இது நியாயமற்ற போட்டியில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை இந்திய நிறுவனங்களுக்கு வழங்குவதாகவும், உலக வர்த்தக அமைப்பின் விதிகளை மீறுவதாகவும் உள்ளதாக தெரிவித்துள்ளது.