கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் பங்கேற்பதற்காக சென்றிருந்தார்.நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்பு மற்றொரு நிகழ்ச்சிக்காக அவர் புறப்பட்டு சென்று கொண்டிருந்த போது காங்கிரஸ் கட்சியின் மீனவர் அணி மாநில நிர்வாகியான தீபா ஆல்பர்ட் என்பவரும் மற்றொரு காங்கிரஸ் கட்சியின் தொண்டரும் சேர்ந்து போலீசாரின் தடையை மீறி பலத்த பாதுகாப்போடு சென்று கொண்டிருந்த கேரளா முதல்வரின் காரின் முன்பு பாய்ந்து கருப்பு கொடியை காட்டினார். உடனடியாக இருவரையும் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர் மீனவர்களின் வாரிசுகளுக்கான கல்வி உதவித்தொகை வழங்குவதில் கால தாமதம் ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சியின் பெண் நிர்வாகி கருப்பு கொடி காட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோன்று மற்றொரு பகுதியில் சபரிமலை தங்க கொள்ளை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பாஜகவினர் கேரள முதல்வரின் காரின் முன்பு கருப்புக்கொடி காட்டி தங்கள் தெரிவித்தனர்.இதையும் படியுங்கள் : கோவில் காணிக்கை, திருப்பணி நன்கொடை முறைகேடு புகார்