வாக்குப்பதிவு இயந்திரங்களில் இருக்கும் வேட்பாளர் பெயர், சின்னம் போன்றவை இனி கருப்பு வெள்ளையில் இல்லாமல் வண்ணங்களில் இடம்பெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார். பீகாரில் சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தலைமை தேர்தல் அதிகாரிகள் டெல்லிக்கு புறப்படும் முன் பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்தனர். பீகாரில் தேர்தலை நடத்த தயாராக இருப்பதாகவும், ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் வாக்காளர் பட்டியல் திருத்தம் அவசியம் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.