ஜம்மு காஷ்மீரில் 150 ஆண்டு கால பழமை வாய்ந்த நடைமுறை படி, குளிர்காலத்தை முன்னிட்டு தலைநகர் ஜம்முவுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து ஜம்மு சென்ற முதலமைச்சர் உமர் அப்துல்லாவுக்கு பொதுமக்கள், வணிகர்கள் என பலரும் பூக்களை கொடுத்து வரவேற்றனர். இந்த பாரம்பரிய இடமாற்ற நிகழ்வு 2021ம் ஆண்டு முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.