உயிருக்கு அச்சுறுத்தலான விலங்குகள் என பட்டியலிட்டு சண்டிகரில் ஆறு வகையான நாய்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கன் புல்டாக்(Bulldog), அமெரிக்கன் பிட்புல்(Pitbull), புல் டெரியர்(Bull Terrier), கேன் கோர்சோ(Cane Corso), டோகோ அர்ஜென்டினோ(Dogo Argentino) மற்றும் ராட்வீலர்(Rottweiler) ஆகிய நாய் இனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பிற்காக தடை செய்யப்பட்ட ஆக்ரோஷமான மற்றும் ஆபத்தானதாகக் கருதப்படும் இந்த வகை நாய் இனங்கள் சண்டிகரில் பதிவு செய்யப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.