பல்வேறு மக்கள் நலத்திட்டங்களுக்காக உலக வங்கியிடம் இருந்து பெறப்பட்ட 14 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு பீகார் பெண்களுக்கு கொடுத்துவிட்டதாக பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி குற்றச்சாட்டியுள்ளது. பீகாரில் என்டிஏ கூட்டணியின் வெற்றிக்கு பெண்களின் வங்கி கணக்கில் 10 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தியது தான் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஜன் சுராஜ் கட்சி இந்த குற்றச்சாட்டை கூறியுள்ளது.