விமானத்தை இயக்க தகுதி கிடையாது எனவே செருப்பு தைக்க போ என தம்மை சாதி வாரியாக இழிவு படுத்தினர் என இண்டிகோவின் மூன்று விமானிகள் மீது பட்டியலினத்தை சேர்ந்த பயிற்சி விமானி போலீசில் புகார் அளித்துள்ளார். தபஸ் டே,மணீஷ் சஹ்னி, கேப்டன் ராகுல் பட்டீல் ஆகிய இந்த மூன்று விமானிகள் மீது 35 வயதான பயிற்சி விமானி அளித்த புகாரில் SC ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் பெங்களூரு போலீசார் FIR பதிவு செய்துள்ளனர். ஜீரோ FIR ஆக இது பதிவு செய்யப்பட்டு இண்டிகோ ஏர்லைன்சின் தலைமையகம் அமைந்துள்ள குருகிராம் காவல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையும் படியுங்கள் : இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கின..