கர்நாடகாவில் திங்கட்கிழமை முதல் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியிலான இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் ஒத்திவைக்கப்பட மாட்டாது என்று கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.