மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் 13,000 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்து, வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய வைர வியாபாரி மெஹுல் சோக்சியை இந்தியாவிடம் ஒப்படைக்க பெல்ஜியம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனது உறவினர் நிரவ் மோடியுடன் இணைந்து வைர வியாபாரம் செய்த மெஹுல் சோக்சி, வங்கியில் 13,000 கோடி ரூபாய் கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல், 2018ல் வெளிநாடு தப்பிச் சென்றார். அவரை நாடு கடத்துவதற்காக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதற்கிடையே ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மெஹுல் சோக்சி, பெல்ஜியத்தில் சிகிச்சை பெற்று வந்ததை தொடர்ந்து, அவரை அந்நாட்டு போலீசார் கைது செய்துசிறையில் அடைத்தனர்.