வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி நேரில் ஆஜராக வேண்டும் என ஹைதராபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள இந்த சொத்து குவிப்பு வழக்கில், ஜெகன் மோகன் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரிய மனுவுக்கு எதிராக சிபிஐ மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நவம்பர் 21ஆம் தேதி ஜெகன் மோகனை நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டது.