புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் இரு தரப்பினர் இடையேயான மோதல் விவகாரம் தொடர்பாக ஊடகங்களில் கருத்து தெரிவித்த விசிக தலைவர் திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் ஒரு தரப்பினர் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேரின் வடம் தொடும் உரிமை குறித்து, பாரம்பரிய முறை தெரியாமல், திருமாவளவன் அவதூறு பரப்பும் வகையிலும், உண்மைக்கு புறம்பாக பேசியுள்ளதாக அவர் மீது ஒரு தரப்பினர் புகார் அளித்தனர்.