ஸ்பெயினிடம் இருந்து சி-295 ஏர்பஸ் ராணுவ போக்குவரத்து விமானத்தை இந்திய ராணுவம் பெற்றுள்ளது. இந்திய விமானப்படைக்காக 56 விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் 2021 ஆம் ஆண்டு செப்டம்பரில் கையெழுத்தானது. 16 விமானங்களை தயாரித்து ஒப்படைக்கவும், 40 விமானங்களை இந்தியாவிலேயே தயாரிக்கவும் ஒப்பந்தம் கையெழுத்தானது.