விமானத்தை இங்கேயே வைத்து பராமரிப்பு பணியை செய்வதா அல்லது பிரிட்டன் கொண்டு செல்வதா என முடிவு செய்ய அந்நாட்டு பொறியாளர்கள் குழு இன்று இந்தியா வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியப் பெருங்கடலில் பிரிட்டன் கடற்படையின் விமானம் தாங்கி போர்க்கப்பல் எச்.எம்.எஸ்., பிரின்ஸ் ஆப் வேல்ஸ் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது. அதிலிருந்து புறப்பட்ட எப்35 பி போர் விமானம், எரிபொருள் பற்றாக்குறை காரணமாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இறங்க அனுமதிக்கப்பட்டது. இருப்பினும் தொழில்நுட்ப காரணமாக அந்த விமானத்தால் பறக்கமுடியவில்லை.இதையும் படியுங்கள்: எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திப்போம் - எம்.ஆர்.விஜயபாஸ்கர்