ஜூன் 14 ஆம் தேதி முதல் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் நிற்கும் பிரிட்டனின் F-35 B போர் விமானத்தின் இறக்கைகள் அகற்றப்பட்டு அது ராணுவ சரக்கு விமானம் மூலம் பிரிட்டனுக்கு கொண்டு செல்லப்படும் என கூறப்படுகிறது. எரிபொருள் தீர்ந்து விட்டதாக கூறி திருவனந்தபுரத்தில் அவசரம் அவசரமாக தரையிறக்கப்பட்ட இந்த போர் விமானத்தில் ஹைட்ராலிக் தொழில்நுட்ப பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதை சரிசெய்யும் முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில், வேறு வழியின்றி அதை பிரிட்டனுக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான சி 17 குளோப்மாஸ்டர் விமானத்தின் அகலம் 4 மீட்டர் மட்டுமே என்பதால் 11 மீட்டர் நீள சிறகுகள் உள்ள F-35 B போர் விமானத்தை அப்படியே கொண்டு செல்வது முடியாது என்பதால், சிறகுகளை பிரித்து விட்டு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளனர்.