திரிபுரா மாநிலம் அகர்தலா பகுதியில் எல்லை பாதுகாப்பு படை தொடக்க நாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற மோட்டார் சைக்கிள் பேரணியில் ஏராளமான வீரர்கள் பங்கேற்றனர். இந்த பேரணியின் மூலம் மக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும், தேசிய பாதுகாப்பில் BSF வீரர்களின் முக்கிய பங்கு உள்ளிட்டவைகளை எடுத்துரைத்தனர்.