தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், மத்திய அரசின் ரயில்வே துறையில் பணியாற்றி வரும் 11 லட்சத்து 71 ஆயிரம் ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியம் தீபாவளி போனஸாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்கான ஒப்புதல் மத்திய அமைச்சரவையில் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மத்திய அரசுக்கு கூடுதலாக 2 ஆயிரத்து 29 கோடி ரூபாய் செலவாகும் என கூறப்படுகிறது.