போயிங் ட்ரீம்லைனர் விமானங்களில் பெரிய அளவில் பாதுகாப்பு குறைபாடுகள் எதுவும் இல்லை என சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. அகமதாபாத் விமான விபத்தை அடுத்து போயிங் ட்ரீம்லைனர் விமானங்களை பரிசோதனைக்கு உட்படுத்த ஏர் இந்தியா நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டது. அதோடு, சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகமும் போயிங் டிரீம்லைனர் விமானங்களை சோதித்தது. விபத்துக்குள்ளான ட்ரீம்லைனர் சீரிஸ் விமானங்கள், விதிகளுக்கு உட்பட்டு இயங்குகிறதா? தயாரிப்பில் ஏதேனும் குறைபாடுகள்இருக்கிறதா? என ஆய்வு செய்யப்பட்டது.இதையும் படியுங்கள் : பொது இடங்களில் கொடிக் கம்பங்கள்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..