டெல்லியில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி நவ்ஜோத் சிங் ((Navjot Singh)) சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவரது மனைவி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நவ்ஜோத் சிங் பைக்கில் அவரது மனைவியுடன் ஹரி நகர் நோக்கி சென்று கொண்டிருந்த போது, BMW காரில் சென்ற பெண் இருசக்கர வாகனத்தில் மோதியுள்ளார். அப்போது தூக்கி வீசப்பட்ட நவ்ஜோத் சிங் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.