டெல்லி பல்கலைக்கழகத்தை தொடர்ந்து, ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலிலும் அனைத்து பதவிகளையும் பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி கைப்பற்றியது. தலைவர், துணைத் தலைவர், பொதுச்செயலாளர், இணைச் செயலாளர், கலாசார பிரிவு செயலாளர், விளையாட்டு பிரிவு செயலாளர் உள்ளிட்ட பதவிகளை கைப்பற்றிய மாணவர்களுக்கு மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, பன்டி சஞ்சய் குமார் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.